தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,029 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 63,588 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,27,23,672 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 343 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,211 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 124 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,203 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 81 ஆக உள்ளது. தற்போது 10,039 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 14 பேர் உயிரிழந்தனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,909 ஆக அதிகரித்துள்ளது.