Corona Virus

தமிழகத்தில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,195 பேருக்கு வைரஸ் தொற்று.. 12 பேர் பலி

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,195 பேருக்கு வைரஸ் தொற்று.. 12 பேர் பலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 69,143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,195 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே இருந்த 1,191 பேரில் சென்னையில் 340, கோவையில் 115, திருவள்ளூரில் 70, செங்கல்பட்டு, சேலத்தில் தலா 66, திருப்பூரில் 62, காஞ்சியில் 46, ஈரோட்டில் 43, வேலூரில் 33, நாமக்கல், மதுரையில் தலா 32 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், நெல்லை, தேனி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் எவரும் பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,195 பேருக்கு வைரஸ் தொற்று.. 12 பேர் பலி

இதனையடுத்து, மாநிலத்தில் மொத்தமாக இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது. அதில், 7 லட்சத்து 76 ஆயிரத்து 878 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,276 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள். ஆகவே தற்போது 10 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகாறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 11 ஆயிரத்து 895 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 12 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories