Corona Virus

இன்று புதிதாக 1,416 பேருக்கு கொரோனா தொற்று... இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,86,163 ஆக உயர்வு!

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 138 பேருக்கும், சேலத்தில் 88 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று புதிதாக 1,416 பேருக்கு கொரோனா தொற்று... இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,86,163 ஆக உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,416 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,86,163 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 69,685 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,19,72,030 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,496 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 138 பேருக்கும், சேலத்தில் 88 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கூட கொரோனா உறுதிசெய்யப்படவில்லை.

இன்று கொரோனா குணமடைந்து 1,413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,63,428 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 10,988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories