Corona Virus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 1.37 லட்சமாக உயர்வு! #COVID19

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94.31 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 1.37 லட்சமாக உயர்வு! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 38,772 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,31,692 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 443 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,37,139 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 45,333 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 88,47,600 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,53,956 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 1.37 லட்சமாக உயர்வு! #COVID19

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.81% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.74% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 8.76.173 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14,03,976 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக மோடி அரசின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories