தமிழகத்தில் புதிதாக 66 ஆயிரத்து 655 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,459 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் 398, கோவையில் 148, திருவள்ளூரில் 88, செங்கல்பட்டில் 80, திருப்பூரில் 79, சேலத்தில் 78, ஈரோட்டில் 70 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதனையடுத்து மாநிலத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.
ஆகையால் மொத்தமாக இதுகாறும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7.57 லட்சத்து 750 ஆக உள்ளது. இருப்பினும் கொரோனாவால் மேலும் 9 பேர் பலியானத்தால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது. பல மாதங்கள் கழித்து ஒற்றை இலக்கில் கொரோனா பலி இன்று பதிவாகியுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது 11 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.