கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 37,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,77,840 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் 480 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,34,218 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 86,04,955 ஆக ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,38,667 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.78% ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்ததியுள்ளார். இந்நிலையில் நோய் தொற்று அதிகமுள்ள அரியானா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகின்றார்.
மேலும் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் வெறும் பெயரளவில் மட்டும் நடப்பதாகவும் அதனைத், வைரஸ் பாதிப்பை தடுக்க பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.