Corona Virus

புதிதாக 1,655 பேருக்கு கொரோனா.. 8 மாதங்களாகியும் குறையாத தொற்று பரவல்..தொடரும் அதிமுக அரசின் மெத்தனம்!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 70 ஆயிரத்து 139 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆண்கள் 982 பேருக்கும் பெண்கள் 673 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 489 பேருக்கும், கோவையில் 154, செங்கல்பட்டில் 108, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 82, திருப்பூரில் 72, சேலத்தில் 67 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் இதுகாறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.69 லட்சத்து 995 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 19 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் மேலும் 2,010 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து மொத்தமாக குணமடந்தோரின் எண்ணிக்கை 7.45 லட்சத்து 848 ஆக உள்ளது. ஆகவே தற்போது 12 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories