Corona Virus

கொரோனாவால் இன்று 1,686 பேர் பாதிப்பு... பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துமா சுகாதாரத்துறை? #Covid19

தமிழகத்தில் இன்று 67,309 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது 65,000 என்ற அளவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,686 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,66,677 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 67,309 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,11,16,440 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 489 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,11,084 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூரில் 132 பேருக்கும் செங்கல்பட்டில் 125 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று கொரோனா குணமடைந்து 2,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,41,705 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 13,404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 11 பேர், அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,568 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories