Corona Virus

குறைந்து வருகிறதா கொரோனா தொற்று? : பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று புதிதாக 1,704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்திற்கும் குறைவான தொற்றுகள் மட்டுமே பதிவாகி வருகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் சோதனையை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,63,282 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 66,244 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,09,82,766 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 479 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,10,135 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று கொரோனா குணமடைந்து 2,311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,37,281 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 14,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தனியார் மருத்துவமனையில் 10 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,531 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories