Corona Virus

“கொரோனா தடுப்பூசி வந்தாலும் தொற்றை முழுமையாக ஒழித்துவிட முடியாது” : #Covid19 தடுப்புக் குழு எச்சரிக்கை!

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழித்துவிட முடியாது என தேசிய கொரோனா தடுப்புக் குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழித்துவிட முடியாது என தேசிய கொரோனா தடுப்புக் குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 88 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் கொரோனா தடுப்புக் குழுவினர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா தடுப்புக் குழு தலைவருமான வி.கே.பால், “கொரோனா தடுப்பூசி வந்தாலும் அதன் மூலமாக மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழித்துவிட முடியாது. தடுப்பூசியும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படும்.

கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால் தொடர் சோதனைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே முழுமையாகத் தடுக்கவும், அழிக்கவும் முடியும்” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் தற்போது 4,000 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

10 நடமாடும் ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு கூடுதலாக 10 ஆயிரம் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், சோதனைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories