Corona Virus

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 2,000-க்கு குறைவாக பதிவான கொரோனா தொற்று! #Covid19

ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் இன்று 2,000 க்கு குறைவாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று 1,939 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,54,460 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,686 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 179 பேருக்கும், செங்கல்பட்டில் 145 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 72,629 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா குணமடைந்து 2,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்து 258 ஆக உள்ளது. தற்போது 17,748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இன்று மட்டும் கொரோனா பாதித்த 14 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories