Corona Virus

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 7,48,225 ஆக உயர்வு! #Covid19

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 577 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,024 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 196 பேருக்கும், திருவள்ளூரில் 107 பேருக்கும், செங்கல்பட்டில் 104 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 72,257 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று கொரோனா குணமடைந்து 2,237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 129 ஆக உள்ளது. தற்போது 18,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இன்று மட்டும் கொரோனா பாதித்த 25 பேர் உயிரிழந்தனர். அதில், 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,387 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories