Corona Virus

தமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா.. சென்னை, கோவையில் தனியாத வைரஸ் பரவல்! #CoronaUpdates

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 154 ஆக உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 74 ஆயிரத்து 496 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 657 பேருக்கும், கோவையில் 220, செங்கல்பட்டில் 151, திருப்பூரில் 122, காஞ்சியில் 116, ஈரோட்டில் 110, திருவள்ளூரில் 107, சேலத்தில் 103 பேருக்கும் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா.. சென்னை, கோவையில் தனியாத வைரஸ் பரவல்! #CoronaUpdates

அடுத்தபடியாக, கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 244 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 30 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதில், அதிகபட்சமாக சென்னையில் 5, கோவை, காஞ்சியில் தலா 4, திருவள்ளூரில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும், வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு மேலும் 2,504 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆகவே மொத்தமாக குணமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 4,031 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தற்போது 19 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories