Corona Virus

சென்னையில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு... தலைநகரில் 3,662 பேர் பலி! #CoronaUpdates

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 2,504 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,27,026 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 71,797 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 97,60,029 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 686 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,533 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 248 பேருக்கும், செங்கல்பட்டில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 136 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா குணமடைந்து இன்று மட்டும் 3,644 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உள்ளது. தற்போது 20,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 30 பேர் உயிரிழந்தனர். அதில், 15 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,152 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories