Corona Virus

குளிர்காலத்தால் தலைநகரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. ஒரே நாளில் 5,891 பேர் பாதிப்பு.. 

டெல்லியில் மூன்றாவது முறையாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நாளை மறுநாள் மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் நான்காயிரத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு பதிவானது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டுமே டெல்லியில் புதிதாக 5,891 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையில் 3.18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதில் தற்போது 32 ஆயிரத்து 363 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் நிரம்பியிருக்கின்றன.

டெல்லியில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. மட்டுமல்லாமல் காற்று மாசும் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் நாளை மறுநாள் (நவ.,02) ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால். உள்ளிட்டோர் அடங்கிய குழு டெல்லி மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories