Corona Virus

அக். 31 நிலவரம் : தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா தொற்று... 31 பேர் உயிரிழப்பு! #Covid19

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,916 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 69,484 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 96,88,232 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,916 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 241 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும், சேலத்தில் 145 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் 3,848 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 91 ஆயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் இன்று ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories