Corona Virus

சென்னையில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று... இன்று 723 பேருக்கு பாதிப்பு! #Covid19

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,173 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76,048 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 96,18,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 723 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,173 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 228 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 3,924 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,87,388 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories