Corona Virus

இன்று 2,516 பேருக்கு தொற்று... 35 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

தமிழகம் முழுவதும் தற்போது 26,356 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 94,68,838 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 688 பேருக்கும், கோவையில் 218 பேருக்கும், ஈரோட்டில் 155 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3,859 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,79,377 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 26,356 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories