Corona Virus

சென்னையில் புதிதாக 747 பேருக்கு கொரோனா.. மேலும் 32 பேர் பலி.. தமிழகத்தின் இன்றைய #CoronaUpdates

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரையில் 6.71 லட்சத்து 489 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக 70 ஆயிரத்து 898 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2,708 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையில் 747, கோவையில் 253, சேலத்தில் 165, செங்கல்பட்டில் 143, திருவள்ளூரில் 133, காஞ்சிபுரத்தில் 119, திருப்பூரில் 109 பேர் என அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 14 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்புக்கு ஆளான 32 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரையில் 10 ஆயிரத்து 956 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். தற்போது 29 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories