Corona Virus

பல வாரங்களுக்குப் பிறகு மூவாயிரத்துக்கு குறைவாக பதிவான கொரோனா தொற்று! #CoronaUpdate

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் பல வாரங்களுக்குப் பிறகு இன்று மூவாயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 78,896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 91,78,099 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 799 பேருக்கும், கோவையில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 4,024 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 31,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

    banner

    Related Stories

    Related Stories