Corona Virus

7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்வு! #CoronaUpdate

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 90,19,152 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 833 பேருக்கும், கோவையில் 285 பேருக்கும், செங்கல்பட்டில் 193 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,314 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,55,170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 34,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 25 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 10,825 பேர் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories