Corona Virus

தமிழகத்தில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு... இன்று 3,086 பேருக்கு தொற்று! #CoronaUpdate

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 80,348 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 89,39,331 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,301 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,50,856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 35,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 10,780 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 845 பேருக்கும், கோவையில் 314 பேருக்கும், சேலத்தில் 198 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories