Corona Virus

தமிழகத்தில் கொரோனா : குறைகிறதா? குறைத்துக் காட்டப்படுகிறதா? - பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்கள்! #Corona

பல்வேறு துறைகளின் அழுத்தத்தின் காரணமாக ஊரடங்கை தளர்த்துவதற்காகவே, பாதிப்பை தொடர்ந்து குறைத்துக் காட்டுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுவரும் தகவல்கள் தவறானவை என்றும், கொரோனா பாதிப்பு குறைத்துக் காட்டப்படுவதாகவும் பொதுமக்களும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடக்கம் முதலே சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

கொரோனா தொற்றினால், மாவட்ட வாரியாக பலியானவர்களின் எண்ணிக்கைக்கும் தமிழக அரசு அறிவித்துவரும் மொத்த எண்ணிக்கைக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதாகவும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி தற்போது தினசரி 3,000 கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஊரடங்கில் தளர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது அரசு. பல்வேறு துறைகளின் அழுத்தத்தின் காரணமாக ஊரடங்கை தளர்த்துவதற்காகவே, பாதிப்பை தொடர்ந்து குறைத்துக் காட்டுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா : குறைகிறதா? குறைத்துக் காட்டப்படுகிறதா? - பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்கள்! #Corona

கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துவருவதாக அரசு அறிவிப்பதால், மக்களும் உண்மையான நோய் தீவிரத்தை உணராமல் போய்விடுகின்றனர். இதனால், தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இந்த ஆபத்தை உணராமல், ஆளும் அ.தி.மு.க அரசு தொடர்ந்து உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறது. பொதுமக்களின் மரணங்கள் மட்டுமல்லாமல் மருத்துவப் பணியாளர்களின் மரணங்களையும் மறைத்து விளையாடி வருகிறது அரசு.

பெரும்பாலானோரின் இறப்புக்கான காரணமாக கொரோனா பாதிப்பைக் காட்டாமல் வேறு பாதிப்புகளைச் சொல்லியும் ஏமாற்றுகிறது அரசு. இப்படி கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதன் விளைவாக, இறந்தவர்களின் உறவினர்களுக்கும் எளிதாக கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த உண்மை நிலவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories