Corona Virus

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா? #CoronaUpdate

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,094 ஆக குறைந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 78,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 88,58,983 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,403 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,46,555 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 36,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 10,741 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 857 பேருக்கும், கோவையில் 263 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories