Corona Virus

தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் 885 பேர் பாதிப்பு! #Covid19

தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 83625 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 87,80,080 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதற்கடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 290 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 241 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,42,152 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 38,093 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 49 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories