Corona Virus

தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா தொற்று... 57 பேர் உயிரிழப்பு! #Covid19

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5,000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. இன்று கொரோனா தொற்றால் 4,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 88,574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 86,07,812 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,586 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா தொற்று... 57 பேர் உயிரிழப்பு! #Covid19

தமிழகத்தில் இன்று 5,005 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,32,708 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 40,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,163 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories