Corona Virus

இன்று சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 387 பேர் பாதிப்பு! #CoronaUpdates

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,87,852 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89,497 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை85,19,238 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,87,852 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 387 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், சேலத்தில் 244 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,245 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,27,703 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,529 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories