Corona Virus

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று... அரசு மருத்துவமனைகளில் அதிக உயிர்பலி!

தமிழகத்தில் தற்போது 43,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று புதிதாக 4,666 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 83,803 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 82,46,830 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 6,12,320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 43,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும், அரசு மருத்துவமனையில் 38 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,164 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோவையில் இன்று 398 பேருக்கும், சேலத்தில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 252 பேருக்கும் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories