Corona Virus

பல வாரங்களுக்குப் பிறகு இன்று 5 ஆயிரத்திற்கு குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு! #CoronaUpdate

தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ததமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.

மிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 78,440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 81,63,027 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,07,203 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 43,747 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,667 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories