இந்தியாவில் தீவிர ஊரடங்கிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு எந்தவிதமான தீவிர செயல்பாடுகளும் காட்டாத நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 74,383 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும். எனவே தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 69 லட்சத்து 79 ஆயிரத்து 424ல் இருந்து 70,53,807 ஆக உயர்ந்து உள்ளது.
அதேப்போல், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 918 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416ல் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 334 ஆக எண்ணிக்கை கூடியுள்ளது.
எனவே தொடர்ந்து நாட்டில் நாள் ஒன்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 900தை கடந்தேதான் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 8,83,185ல் இருந்து ஆக 8,67,496 குறைந்து மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 59,88,823ல் இருந்து 60,77,977 ஆக உயர்ந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு தரப்பு கூறியுள்ளது.