Corona Virus

புதிதாக 5015 பேருக்கு கொரோனா..மேலும் 65 பேர் பலி: தணியாத வைரஸ் பரவல்.. கைவிட்ட ஆளும் அரசு.. #Covidupdates

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.56 லட்சத்து 385 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 88 ஆயிரத்து 439 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5015 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,250, கோவையில் 389, செங்கல்பட்டில் 258, சேலத்தில் 29 என பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதேப்போல திண்டுக்கல், காஞ்சி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளது.

புதிதாக 5015 பேருக்கு கொரோனா..மேலும் 65 பேர் பலி: தணியாத வைரஸ் பரவல்.. கைவிட்ட ஆளும் அரசு.. #Covidupdates

இதனையடுத்து, மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.56 லட்சத்து 385 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு நிகராக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் பதிவாகி வருகிறது.

அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 5,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் 6லட்சத்து 2,038 குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இன்று மேலும் 65 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தற்போது 44 ஆயிரத்து 95 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories