Corona Virus

தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 6,51,370 ஆக உயர்வு!

சென்னையில் மட்டும் இன்று 1,272 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று புதிதாக 5,242 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 89,450 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 79,96,148 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5,97,033 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 44,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 31 பேரும், அரசு மருத்துவமனையில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,272 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோவையில் இன்று 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories