உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைப் பிரிவின் தலைவர் கூறியதாவது தற்போது சிறந்த மதிப்பீடுகள் என்னவென்றால் உலகெங்கிலும் சுமார் 10 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட 20 மடங்குக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும், கடினமான காலம் இனிதான் வர இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
உலகில் முதல் முறையாகச் சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்குப் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை, அந்த முயற்சி இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆனாலும் இன்று வரை கொரோனாவின் தாக்கம் இந்தியா உட்பட பல நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலக நாடுகள் முழுவதும் சேர்த்து 3 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 78 லட்சத்து 42 ஆயிரத்து 847 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 588 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகம். ஆனாலும், கொரோனா தொற்றால் இதுவரை 10 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா 77,17,918 எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா 66,85,083 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பிரேசிலில் 49,70,953 பேரும், ரஷ்யாவில் 12,37,504, கொலம்பியாவில் 8,69,808, இதை தொடர்ந்து ஸ்பெயின் 8,65,631, பெரு 8,32,929, அர்ஜெண்டினா 8,24,468, மெக்சிகோ 7,89,780 மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 6,83,242 பேர் என இந்த நாடுகள் அனைத்தும் அதிகம் பாதிக்கப்பட்டவை ஆகும்.
கொரோனாவால் அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளிலும் அமெரிக்காதான் 92,15,729) முதலிடத்தில் உள்ளது இதையடுத்து பிரேசிலில் 1,47,571 பேர் இறந்துள்ளனர்,
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை - 1,03,569 ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் 56,62,491 எண்ணிக்கையுடன் உள்ளது. மேலும் அமெரிக்கா 49,26,980, பிரேசில் 43,52,871, ரஷ்யா 9,88,576 என்ற வரிசையில் உள்ளது.