Corona Virus

தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இன்று 71 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 79,279 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 76 லட்சத்து 63 ஆயிரத்து 561 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,306 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 434 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 263 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 71 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 41 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories