Corona Virus

“ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியமுண்டு” - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவை பரவ சாத்தியம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது பதிலில் கூறியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக அளவில் சாத்தியம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே நாடு முழுவதும் பண பரிவர்த்தனை முறையை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) அறிவுறுத்தலின்படி டிஜிட்டல்மயமாக்கவேண்டும் என்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு அதிக சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற பல்வேறு ஆன்லைன் டிஜிட்டல் சேனல்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் உட்கார்ந்துகொண்டே பணம் செலுத்தலாம் என்றும், மேலும் முடிந்தவரை ரொக்க பணத்தைப் பயன்படுத்துவதை அல்லது திரும்பப் பெறுவதைத் தவிர்க்கலாம்" என்று கூறியுள்ளது.

“ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியமுண்டு” - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சிஏஐடி (CAIT) ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளதா எனக் கடிதம் எழுதிக் கேட்டிருந்தது. இதனை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி பதில் அளிக்கும்படி நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மார்ச் 9, 2020 அன்று, அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான (CAIT) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தது, அதில் ரூபாய் நோட்டுக்கள் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவ வாய்ப்புள்ளதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று எழுதியிருந்தது. இந்த கடிதத்தை நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியது. இதற்கு ரிசர்வ் வங்கி கூறியதாவது, ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ்கள் பரவ சாத்தியம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது பதிலில் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories