Corona Virus

சென்னையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: கடந்த ஒரு வாரத்தில் 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி!

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு வாரத்தில் 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் 7 நாட்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள 12 மண்டலங்களில் நோய்த் தொற்று சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரத்தில் நோய்த் தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த 7 நாட்களில் மட்டும் 9,134 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. எனவே மீண்டும் சென்னையில் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் இந்த அளவிற்குத் தொற்று அதிகரித்த பின்னரே சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம் மற்றும் மருத்துவப் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்று உள்ள மண்டலங்களைக் கண்டறிந்து அவற்றை மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக கடந்த ஒரு வாரத்தில் திருவொற்றியூா் மண்டலத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தண்டையார்பேட்டையில் 5.7 சதவீதமும், மாதவரத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூரில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகரில் 4.1 சதவீதமும், அம்பத்தூரில் 3.8 சதவீதமும், அடையாற்றில் 3.5 சதவீதமும், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 2.7 சதவீதமும், அண்ணா நகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் சென்னையில் உள்ள மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் முன்பை விட சென்னையில் கொரோனா தொற்று 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories