Corona Virus

உயிர்குடிக்கும் கொரோனாவை தடுக்க நினைக்காத அரசு : தமிழகத்தில் இதுவரை 9,653 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 5,588 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 83,123 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 73 லட்சத்து 04 ஆயிரத்து 809 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,603 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,52,938 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,70,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 396 பேருக்கும், சேலத்தில் 355 பேருக்கும், திருவள்ளூரில் 255 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,653 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories