Corona Virus

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது..!

கொரோனாவால் நாட்டில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் புதிதாகப் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேராத்தில் புதிதாக 70,589 பேருக்கு கொரோனா பாதித்துள்ளனர் இந்தநிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை (29.9.20) 8 மணி நிலவரப்படி மேலும், 776 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 84,877 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 51,01,398 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது..!

தற்போது மருத்துவத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,47,576 ஆக உள்ளது, இந்தநிலையில் குணமடைந்தோர் விகிதம் 83.01% ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆகக் குறைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 15.42% ஆக குறைந்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர் அறிக்கைப்படி இந்தியாவில் ஒரே நாளில் 11,41,811 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 7,31,10,041 கோடி பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது..!

தமிழகம்: இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 5,30,708 லட்சமாகவும், சிகிச்சை பெறுவோர் 46,306 ஆயிரமாகவும் இறந்தவர்கள் எண்ணிக்கை 9,383 ஆயிரமாக உள்ளது.

கேரளா: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,957ஆயிரமாகவும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,268 லட்சமாகவும் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 697 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories