Corona Virus

சென்னை, கோவையில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம்... ஒரே நாளில் 5,679 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. 72 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல் முறையாக இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் 93 ஆயிரத்து 2 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், மாநிலத்திற்குள்ளேயே இருந்த 5,671 பேருக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்த 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,193 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் வரையில் 1000க்கும் கீழ் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் 1000க்கும் அதிகமாகி இருப்பது அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து, கோவையில் 661, சேலத்தில் 297, செங்கல்பட்டில் 277, கடலூரில் 235, திருவள்ளூரில் 229 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆகவே மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, கோவையில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம்... ஒரே நாளில் 5,679 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. 72 பேர் பலி!

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. இதுவரையில் 9 ஆயிரத்து 148 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதில், அதிகபட்சமாக சென்னையில் 3,128, செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 535, கோவையில் 408, மதுரையில் 383, காஞ்சியில் 306 என பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து ஒரே நாளில் 5,626 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாகவும், இதுகாறும் 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 46 ஆயிரத்து 386 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories