தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 80,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 65 லட்சத்து 55 ஆயிரத்து 328 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,56,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, கோவையில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 31 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8,871 ஆக அதிகரித்துள்ளது.