தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 62 லட்சத்து 17 ஆயிரத்து 923 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 992 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 46,610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 59 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,618 ஆக அதிகரித்துள்ளது.