Corona Virus

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு... 6,185 பேர் டிஸ்சார்ஜ்! #CoronaUpdate

தமிழகத்தில் இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 85,473 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, கோவையில் 440 பேருக்கும், சேலத்தில் 300 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு... 6,185 பேர் டிஸ்சார்ஜ்! #CoronaUpdate

தமிழகத்தில் இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உள்ளது. . தற்போது 48,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,154 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories