Corona Virus

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்! #Covid19

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து நாளை முதல் துவங்குகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 85,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 52 லட்சத்து 98 ஆயிரத்து 508 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்! #Covid19

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 955 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும், செங்கல்பட்டில் 361 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 51,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 58 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,836 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories