உலக சுகாதார அமைப்பு ”அடுத்த ஆண்டு 2021ன் மத்திய காலகட்டம் வரை கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா ஒரு COVID -19 தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்தது, அந்த சோதனை சில மேற்கத்திய வல்லுநர்களை அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கத் தூண்டியது.
அமெரிக்க பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கூறியதாவது, கோவிட் -19க்கு தடுப்பூசி அக்டோபர் பிற்பகுதியில் விநியோகிக்கத் தயாராக இருக்கும் என்று தெரிவித்தது. அது நவம்பர் 3ம் தேதி நடைபெறும் அமெரிக்கத் தேர்தலுக்குச் சற்று முன்னதாகவே இருக்கும், இது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும். ஏனென்றால் வாக்காளர்களிடையே தொற்றுநோய் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, "அடுத்த ஆண்டின் பாதி வரை கொரோனாவுக்கு பரவலான தடுப்பூசி போடப்படுவதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை" என்று செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் ஜெனீவாவில் ஒரு மாநாட்டில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.