Corona Virus

தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 91 பேர் பலி #CoronaUpdates

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 75,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 48 லட்சத்து 13 ஆயிரத்து 147 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 589 பேருக்கும், சேலத்தில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 347 பேருக்கும், கடலூரில் 307 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 91 பேர் பலி #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 6,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக உள்ளது. தற்போது 52,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 பேர் உயிரிழந்தனர். அதில், 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories