Corona Virus

இன்று புதிய உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் 6,495 பேருக்கு வைரஸ் தொற்று.. 94 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,406 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 80 ஆயிரத்து 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6,495 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

அதில் சென்னையில் 1,249 பேருக்கும் பிற மாவட்டங்களில் 5,246 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிய உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் 6,495 பேருக்கு வைரஸ் தொற்று.. 94 பேர் பலி! #CoronaUpdates

இன்று தமிழகத்தில் 94 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். ஆகவே மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 16 பேர், சேலத்தில் 9, செங்கல்பட்டில் 8, கடலூர், கோவை, காஞ்சியில் தலா 5, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சியில் தலா 4 பேர் வீதம் உயிரிழந்திருக்கிறார்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் அதிகபட்ச பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்று கோவையில் 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செங்கல்பட்டில் 419, கடலூரில் 983, சேலத்தில் 329, திருவள்ளூரில் 293, கள்ளக்குறிச்சி 228 பேர் என கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று புதிய உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் 6,495 பேருக்கு வைரஸ் தொற்று.. 94 பேர் பலி! #CoronaUpdates

மேலும், இன்று ஒரே நாளில் ஆறாயிரத்து 406 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகாறும் மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 133 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருகிறார்கள். இதனையடுத்து தற்போது 52 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் வந்த ஆறாயிரத்து 257 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories