Corona Virus

தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இன்று மட்டும் 109 பேர் உயிரிழப்பு! #Covid19

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,981 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 76,345 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 44 லட்சத்து 98 ஆயிரத்து 706 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,286 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,30,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையில் 439 பேருக்கும், சேலத்தில் 413 பேருக்கும், திருவள்ளூரில் 323 பேருக்கும், செங்கல்பட்டில் 298 பேருக்கும், கடலூரில் 261 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இன்று மட்டும் 109 பேர் உயிரிழப்பு! #Covid19

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 ஆக உள்ளது. தற்போது 52,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 109 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 79 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories