Corona Virus

தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று... 118 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 75,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 44 லட்சத்து 22 ஆயிரத்து 361 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 484 பேருக்கும், சேலத்தில் 451 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், செங்கல்பட்டில் 294 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று... 118 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று மட்டும் 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 60 ஆக உள்ளது. தற்போது 52,362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,839 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories