Corona Virus

இந்தியாவில் ஒரே நாளில் 60,975 பேருக்கு கொரோனா - உயிரிழந்தோர் எண்ணிக்கை 58,390 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,809,241 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 817,005 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,915,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் நேற்றூ ஒரே நாளில் 60,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 848 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 60,975 பேருக்கு கொரோனா - உயிரிழந்தோர் எண்ணிக்கை 58,390 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,323 ஆகவும், யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 58,390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது. கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

banner

Related Stories

Related Stories