Corona Virus

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 120 பேர் பலி... மொத்த உயிரிழப்பு 5,886 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 67,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 37 லட்சத்து 78 ஆயிரத்து 778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் ண்ணிக்கை 2 லட்சத்து 83ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 120 பேர் உயிரிழந்தனர். அதில், 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories